Facebook மற்றும் Instagram-ன் தாய் நிறுவனமான Meta, பரவலான உலகளாவிய செயலிழப்பைத் தொடர்ந்து சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக நேற்று, புதன்கிழமை அறிவித்தது.
நேற்று ஏற்பட்ட இந்த இடையூறு, இரண்டு தளங்களையும் அணுகும் மில்லியன் கணக்கான பயனர்களின் திறனை பாதித்தது.
மெட்டாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆண்டி ஸ்டோன், செயலிழப்பினால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தொழில்நுட்ப சிக்கலை ஒப்புக்கொண்டதுடன், முடிந்தவரை விரைவாக தீர்க்கப்பட்டதாக பயனர்களுக்கு உறுதியளித்தார்.
“இன்றைக்கு முன்னதாக, தொழில்நுட்பச் சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்தவரை விரைவாகச் சிக்கலைத் தீர்த்துவிட்டோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று ஆண்டி ஸ்டோன் கூறினார்.
தகவல் தொடர்பு, நெட்வொர்க்கிங் மற்றும் பொழுதுபோக்கிற்கான தளங்களை நம்பியிருக்கும் பயனர்களிடையே இது திடீர் இடையூறு விரக்தியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.