வடமேற்கில் உள்ள குரிகா நகரில் 100க்கும் மேற்பட்ட நைஜீரிய பள்ளி மாணவர்களை போகோ ஹராம் ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த கிளர்ச்சியாளர்கள் பாடசாலைக்குள் புகுந்து 8 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களை ஆசிரியர் ஒருவருடன் அழைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்ட மாணவர் ஒருவர் தற்போது பிர்னின் குவாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மைய ஆண்டுகளில் குறிப்பாக வடமேற்கு பிராந்தியத்தில் பெருமளவிலான மக்கள் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சமீப ஆண்டுகளில் குழந்தைகளை பெருமளவில் கடத்துவது குறைந்துள்ளது.
வடகிழக்கு நைஜீரியாவில் விறகு சேகரித்து கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த கடத்தல் நடந்துள்ளது.
எனினும் இந்த இரண்டு பாரிய கடத்தல் சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
நைஜீரியாவில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் முயற்சியில், 2022 இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது, இது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கடத்தல் ஆகியவற்றை ஒரு குற்றமாக மாற்றும், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.