Melbourneமெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

-

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் தாக்கப்படுவதாக இரகசிய விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ரயிலில் தாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மெல்போர்னில் உள்ள டிராம்களில் அல்லது அதற்கு அருகாமையில் தினமும் குறைந்தது ஒருவராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மெல்போர்னில் உள்ள ரயில்கள் அல்லது நிலையங்களில் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை என்றும், இதனை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விக்டோரியா மாநில பொது போக்குவரத்து அமைச்சர் கேப்ரியல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டிலிருந்து பொதுப் போக்குவரத்து தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இதற்கு நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் தலையிட வேண்டுமென வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு

சீனாவின் மலைப்பகுதியான திபெத் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 130...

2025-இல் முக்கிய வங்கிகளின் பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் 2025 ஆம் ஆண்டிற்கான பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்த தங்கள் கணிப்புகளை வழங்கியுள்ளன. NAB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ...

Dandenong-இல் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத ஒருவரின் சடலம்

நேற்று காலை 9.40 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,Dandenong-ல் உள்ள சொத்து ஒன்றில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Dandenongல் உள்ள மெக்ரே செயின்ட்டில்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...

இளைஞர்கள் அதிகமுள்ள நகரம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் காணப்படுகின்றது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...