கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
ஒட்டாவாவிலுள்ள இன்பினிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை கனடாவின் புத்தமத பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இறுதிச் சடங்கு கனடா நேரப்படி பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் திறந்திருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த தனுஷ்க விக்ரமசிங்கவும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு, ஒட்டாவாவின் தலைநகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Barrhaven என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் சிறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கனடாவிற்கு கல்வி கற்கச் சென்றிருந்ததாகவும் இக்குடும்பத்துடன் நட்பாக பழகி வந்ததாகவும் இவர்களது வீட்டில் சில காலம் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞன் இணையத்தில் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பதை கனேடிய பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.