News5ஆவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாகும் புட்டின்

5ஆவது தடவையாகவும் ரஷ்ய ஜனாதிபதியாகும் புட்டின்

-

ரஷ்ய ஜனாதிபதியாக புட்டின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா்.

இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் ஜனாதிபதி தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு ஜனாதிபதி புட்டினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது.

புட்டினை தீவிரமாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் உயிரிழந்தாா். இதேபோல புட்டினின் பிற எதிா்ப்பாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா் அல்லது நாடு கடத்தப்பட்டனா். இதனால் பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தோ்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தோ்தல் உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து ரஷ்யாவுடன் சோ்த்துக் கொள்ளப்பட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...