CinemaAI தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்காக பயன்படுத்த முடியும் - A.R.ரஹ்மான்

AI தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்காக பயன்படுத்த முடியும் – A.R.ரஹ்மான்

-

‘The Goat Life’ படத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “AI தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்கு பயன்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக உள்ள அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்க முடியும்.

AI தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வேலைகளை பறிக்காமல் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் அவர்களை வளர்ப்பதும்தான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். தலைவர்களாகவும், வேலை வழங்குபவர்களாகவும் யாருடைய வேலையும் போகக்கூடாது என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நேரம் தேவைப்படும் விஷயங்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். கலையில் கூட, நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்கள் என்றால், அதற்கான பயணத்தை கற்பனை செய்வது இப்போது மிகவும் எளிதானது. நீங்கள் அதை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லலாம். நாம் AI தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டுமே தவிர அதைக் கொண்டு மனிதர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது” என்று அவர் பேசியுள்ளார்.

லால் சலாம் திரைப்படத்தில் ‘திமிரி ஏழுடா’ என்ற பாடலுக்காக மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை மீண்டும் உருவாக்க AI தொழில்நுட்பத்தை ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம்...

மக்கள் இன்றி காலியாக இருக்கும் 9 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள்

ஜப்பானில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை சாதனை எண்ணிக்கையான ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

வரலாறு காணாத அளவுக்கு உயரும் வீடுகளின் விலை

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வட்டி விகித சுழற்சி உள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும்...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

சிட்னி உட்பட பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை

சிட்னி உட்பட பல பகுதிகளில் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ்...