Newsஅவுஸ்திரேலியாவில் முன்னால் காதலி கொடுத்த விலையுயர்ந்த பரிசு!

அவுஸ்திரேலியாவில் முன்னால் காதலி கொடுத்த விலையுயர்ந்த பரிசு!

-

அவுஸ்திரேலிய டிக் டோக் பிரபலம் ஒருவரின் முன்னாள் காதலி, விலையுயர்ந்த கார் ஒன்றினை பிறந்தநாள் பரிசாக கொடுத்தது பேசு பொருளாகியுள்ளது.

Anna Paull எனும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் TikTok பிரபலமாக வலம் வருகிறார்.

24 வயதாகும் இவர் க்ளென் தாம்சன் என்ற தனது காதலரை பிரிந்துவிட்டார். ஆனாலும் அவரது பிறந்தநாளுக்கு பரிசளிக்க விரும்பியுள்ளார் அன்னா.

அதற்காக அவர் பாரிய அளவிலான தொகையை செலவு செய்துள்ளார். அதாவது Nissan Skyline GT-R R33 எனும் காரினை முன்னாள் காதலருக்கு பரிசளித்துள்ளார்.

இந்த காரின் விலை 4,00,000 அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகும். க்ளென் தாம்சன் இந்த பரிசினை சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரினை கண்டதும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.

இந்த நிலையில் Anna Paull தனது Instagram பக்கத்தில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.

அதில், ‘உலகின் சிறந்த முன்னாள் காதலி’ என குறிப்பிட்ட அவர், நான் அவரது கனவு காரில் உடன் இருக்கிறேன். க்ளெனை விட வேறு யாரும் அதற்கு தகுதியானவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் க்ளென் உடன் காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

Latest news

காட்டுத்தீ வலயங்களில் இருந்து இதுவரை வெளியேறாத விக்டோரியர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ அபாயம் காரணமாக மேற்கு விக்டோரியா பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை மக்கள் அபாய வலயங்களை...

அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் தற்காலிக விசா குடியேற்றப் பெண்கள்

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலிய பணியிடங்களுக்கு வரும் புலம்பெயர்ந்த பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து NSW யூனியன்ஸ் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. தாற்காலிக விசா பெற்ற 3000...

தெற்காசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஒரு புதிய விசா வகை

இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள், திறமையான ஆரம்ப-தொழில் வல்லுநர்களுக்கான மொபிலிட்டி ஏற்பாட்டின் கீழ், ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வசிக்கவும், பணியாற்றவும் புதிய வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான...

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை நோயாளிகள் தொடர்பில் வெளியான ஆய்வு

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. World of Statistics இணையதளம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.உலக மக்கள் தொகையில்...

விக்டோரியா மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும்...

உலகின் மிக அற்புதமான நகரங்களில் மெல்போர்ன் முதலிடம்

உலகின் சிலிர்ப்பை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெயரிடப்பட்டுள்ளது. டைம் அவுட் சாகரவா இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது...