உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
ஐ.நாவின் வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் உலகின் மகிழ்ச்சியான நாடாகவுள்ளது.
அந்தவகையில் முறையே
- பின்லாந்து
- டென்மார்க்
- ஐஸ்லாந்து
- சுவீடன்
- இஸ்ரேல்
- நெதர்லாந்து
- நோர்வே
- லக்ஸம்பேர்க்
- சுவிட்சர்லாந்து
- அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.
2020 இல் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பையேற்று, மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜேர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை.
முறையே 23 மற்றும் 24 ஆவது இடத்திலிருந்து வருகின்றன. கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13ஆம் இடங்களிலுள்ளன.
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.