Newsதீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் Mercedes Benz பல மாடல்கள்

தீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் Mercedes Benz பல மாடல்கள்

-

1983 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் தீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்டன.

தீயை ஏற்படுத்தக்கூடிய உற்பத்திக் குறைபாடு காரணமாக 8 Mercedes Benz மாடல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வாகனங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 8 Mercedes Benz C-Class, E-Class, S-Class, SL, CLE, EQE, EQS மற்றும் AMG மாடல்கள் அடங்கும்.

உள்ளக தொழிநுட்பக் கோளாறினால் வாகனம் ஓட்டும் போது தீப்பிடித்து எரியும் அபாயம் உள்ளதாக வெளியான தகவல் காரணமாக வாகனங்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தை ஓட்டும் சாரதிகள் மற்றும் வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்துக்கள் அதிகரிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mercedes Benz இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய வாகனங்களின் VIN எண்கள் அடங்கிய பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் தொடர்புடைய வாகன விற்பனையாளர்களைத் தொடர்புகொண்டு புதிய ஒன்றை இலவசமாகப் பெற முடியும்.

இது பற்றிய கூடுதல் தகவல்களை Mercedes Benz வாடிக்கையாளர் சேவை மையங்களை 1300 762718 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Latest news

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...