Sports6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது குஜராத் - IPL 2024

6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது குஜராத் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் 5-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 168 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் 0 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து வந்த நமன் அதிரடியாக விளையாடி 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரோகித்- ப்ரீவிஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் 43 ஓட்டங்களுடனும் ப்ரீவிஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, ஜெரால்ட் கோட்ஸி 1 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை பாண்ட்யா சிக்சருக்கும் 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார். 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வியடைவது தொடர்கிறது.

Latest news

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம்...

மக்கள் இன்றி காலியாக இருக்கும் 9 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள்

ஜப்பானில் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை சாதனை எண்ணிக்கையான ஒன்பது மில்லியனாக உயர்ந்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

வரலாறு காணாத அளவுக்கு உயரும் வீடுகளின் விலை

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வட்டி விகித சுழற்சி உள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும்...

பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டை தடுக்க புதிய மென்பொருள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி திருட்டு சுமார் 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்களை குறிவைத்து பாதுகாப்பை...

சிட்னி உட்பட பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை

சிட்னி உட்பட பல பகுதிகளில் மழையுடனான வானிலை வார இறுதி நாட்களிலும் தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ்...