சீன பிரஜைகள் குழு நடத்திய இணைய சதியில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் online accounts Hack செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை மற்றும் FBI கூறுகிறது.
சைபர் தாக்குதல் வலையமைப்பின் 14 வருட செயற்பாடு தொடர்பாக ஏழு சீன பிரஜைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகிக்கப்படும் ஏழு சீன பிரஜைகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
சீன வணிகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை விமர்சிக்கும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நபர்களை ஹேக்கர்கள் குறிவைத்ததாக நீதித்துறை கூறியுள்ளது.
சந்தேகத்திற்குரிய ஏழு சீன பிரஜைகளும் 10,000 தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டது, இது சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒரு வெற்றிகரமான ஹேக்கிங் நடவடிக்கை என்று நீதித்துறை விவரித்துள்ளது.
அமெரிக்காவையும் அதன் பங்காளிகளையும் குறிவைத்து உளவு பார்ப்பதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சீனா அனுப்புகிறது என்று FBI வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்களை அயராது பின்தொடர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன பிரஜைகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் அமெரிக்கர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களில் பணிபுரியும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, உற்பத்தி மற்றும் வர்த்தகம், நிதி, ஆலோசனை, சட்டம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிவைக்கப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்க இராணுவத்திற்கு சேவைகளை வழங்கும் பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் 5G நெட்வொர்க் உபகரணங்களை வழங்கும் நிறுவனமும் அடங்கும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.