Sports63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை - IPL 2024

63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை – IPL 2024

-

IPL தொடரின் நேற்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் ஆகியோர் 46 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் இறங்கினார். சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது (21) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினர்.

பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை எடுத்தது.

இதனால் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நன்றி தமிழன்

Latest news

100 மில்லியன் டாலர்களை வெல்ல அதிக ஆர்வமாக உள்ள மக்கள்

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பெரிய பவர்பால் டிரா நாளை டிரா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது $100 மில்லியன் வெற்றி, கடந்த வாரம் $50 மில்லியன் பவர்பால் டிரா வெற்றியாளர்...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...

பள்ளி செல்லும் விக்டோரியன் குழந்தைகளின் பெற்றோருக்கு $400 உதவித்தொகை

விக்டோரியா மாநில அரசு, குழந்தைகளின் கல்விச் செலவுகளை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் அறிவிக்கப்பட்ட மாநில பட்ஜெட் திட்டத்தின்படி, இந்த அமைப்பின் மூலம், ஒரு...

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம்...

மெல்பேர்ண் மற்றும் சிட்னி வீடுகளின் விலை தொடர்பில் வெளியான நற்செய்தி

"SQM Research" இன் சமீபத்திய Boom and Bust அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வீடுகளின் விலை மேலும் குறையும் என்று...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...