Breaking Newsகப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம் - பலர் உயிரிழந்திருக்கலாம் என...

கப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்

-

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 2.6 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலத்திற்கு அடியில். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சரக்கு கப்பல் பாலத்தில் மோதியது.

சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் சிங்கப்பூர் கொடியேந்திய சரக்கு கப்பல் சிக்கியது. இந்த கப்பல் மெர்ஸ்க் (Maersk) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது டாலி என அழைக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரக்கு கப்பல் விபத்தில் சிக்கும் முன், அதில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேரிலேண்ட் மாகாண ஆளுநர் வெஸ் மூரே தெரிவித்தார். விபத்தில் சிக்கிய கப்பலில் இந்தியர்கள் இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

Latest news

Android பயனர்களை விட மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் iPhone பயனர்கள்

மோசடி மற்றும் scam குறுஞ்செய்திகளால் iPhone-ஐ விட Android பயனர்கள் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வானது Google நிறுவனத்தால் YouGov என்ற...

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

சீனாவின் செல்வாக்கிற்கு எதிர்வினையாக ஆஸ்திரேலியா-அமெரிக்க கனிம ஒப்பந்தம்

அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி...

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...