இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்கருதி நாட்டில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.