Newsடெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் - IPL 2024

டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2024

-

IPL 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் Riyan Parag தனியாளாக அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.

பராக் 45 பந்துகளில் 84 ஓட்டங்களும், அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் பந்துவீசிய ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார். ஆனால், அவர் 23 (12) ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, நான்ரே பர்கரின் அசுரவேகத்தில் கிளீன் போல்டு ஆனார்.

அடுத்து வந்த ரிக்கி புய் அதே ஓவரில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கிடையில் David Warner ருத்ர தாண்டவம் ஆடினார்.

மறுமுனையில் ரிஷாப் பண்ட் நிதானமாக ஆட, டேவிட் வார்னர் 49 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து அணித்தலைவர் பண்ட் 28 ஓட்டங்களில் சஹால் ஓவரில் ஆட்டமிழக்க டெல்லி அணி சரிவை சந்தித்தது. அப்போது அதிரடியில் இறங்கிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் பந்துவீசினார். மிரட்டலாகவும், துல்லியமாகவும் அவர் பந்துவீசியதால் டெல்லி அணியால் 4 ஓட்டங்கள் மட்டுமே அந்த ஓவரில் எடுக்க முடிந்தது.

இதன்மூலம் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. சஹால், பர்கர் தலா 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...