Sportsசென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி - IPL...

சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31 நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ஓட்டங்களை குவித்தனர். அடுத்த வந்த அணித் தலைவர் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ஓட்டங்களிலும், ஸ்டப்ஸ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பண்ட் 51 ஓட்டங்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து 192 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னை அணியின் ஆரம்ப வீரர்கள் அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டது.

போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ஓட்டங்களுடனும், ஜடேஜா 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.

நன்றி தமிழன்

Latest news

இதுவரை அடையாளம் காணப்படாத 27 புதிய விலங்கு இனங்கள் கண்டுபிடிப்பு

பெருவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு 27 புதிய விலங்கு இனங்களை கண்டுபிடித்துள்ளனர். "blob-headed fish" என்ற பெயரில் பல்வேறு வகையான மீன்களும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது 'Semi-aquatic...

ஆஸ்திரேலியா மாணவர் விசா விண்ணப்பங்கள் எவ்வாறு கருதப்படுகின்றன?

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் எதிர்பார்ப்புடன் தற்போது வெளிநாட்டில் உள்ள மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் செயல்முறையில் பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை அமலில் இருந்த 107வது அமைச்சர் கண்காணிப்பு...

விக்டோரியர்களுக்கு மீண்டும் Buruli ஆபத்து

கொசுக்களால் பரவும் நோய் குறித்து விக்டோரியா மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Buruli என்று பெயரிடப்பட்ட இந்த நோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களால் கடித்த பிறகு புண்களாக உருவாகிறது...

ஜெர்மனியை உலுக்கிய கிறிஸ்துமஸ் கடை விபத்து

ஜேர்மனியின் Magdeburg நகரில் கிறிஸ்மஸ் சந்தையின் போது கூட்டத்தின் மீது கார் மோதியதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அறுபத்தெட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் அவர்களில்...

உலகின் மிக ஆபத்தான கடற்கரைகளில் இரு ஆஸ்திரேலிய கடற்கரைகள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு கடற்கரைகள் உலகின் மிகவும் ஆபத்தான கடற்கரைகளில் ஒன்றாகும். கடற்கரை யாருக்கும் பிடித்த இடமாக இருந்தாலும், நீச்சலின் போது ஏற்படும் ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக இந்த...

ஜனவரி 01 முதல் விக்டோரியாவில் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்வு

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் பின்னர், விக்டோரியாவில் பொது போக்குவரத்து கட்டணங்கள் ஜனவரி 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். அதன்படி,...