ஈஸ்டர் ஞாயிறு அன்று வத்திக்கானில் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்ட புனித திருத்தந்தை பிரான்சிஸ், காசா பகுதி மற்றும் உக்ரைனில் நடக்கும் போர்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுதங்களால் அமைதியை அடைய முடியாது என்று போப் தனது பாரம்பரிய ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காஸா மோதலில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈஸ்டர் ஞாயிறு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர்.
புனித வெள்ளியன்று நடந்த ஊர்வலத்தில் பங்கேற்காததால் போப்பின் உடல்நிலை குறித்து கவலைகள் எழுந்தன, ஆனால்
87 வயதான போப் ஒரு நீண்ட பிரசங்கத்தைப் படித்து பல ஞானஸ்நானங்களைச் செய்துள்ளார்.
இலங்கையின் கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கிறிஸ்தவ பக்தர்களுக்கு புனித நற்கருணை வழங்கியுள்ளார்.