தாய்வான் அருகே நேற்று காலை 7.5 ரிச்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 3 மீற்றர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதுடன் , 800இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள இச்சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியதுடன் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .





