Sportsகுஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் - IPL 2024

குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களை எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஒஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் – பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ஓட்டங்களை சேர்த்தனர்.

பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ஓட்டங்களில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களிலும் ராசா 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ஓட்டங்களை குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா ஆட்டமிழக்க அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ஓட்டம் எடுத்தார்.

இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஓட்டங்களை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

காட்டுத்தீ வலயங்களில் இருந்து இதுவரை வெளியேறாத விக்டோரியர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ அபாயம் காரணமாக மேற்கு விக்டோரியா பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை மக்கள் அபாய வலயங்களை...

அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் தற்காலிக விசா குடியேற்றப் பெண்கள்

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலிய பணியிடங்களுக்கு வரும் புலம்பெயர்ந்த பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து NSW யூனியன்ஸ் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. தாற்காலிக விசா பெற்ற 3000...

தெற்காசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஒரு புதிய விசா வகை

இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள், திறமையான ஆரம்ப-தொழில் வல்லுநர்களுக்கான மொபிலிட்டி ஏற்பாட்டின் கீழ், ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வசிக்கவும், பணியாற்றவும் புதிய வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான...

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை நோயாளிகள் தொடர்பில் வெளியான ஆய்வு

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. World of Statistics இணையதளம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.உலக மக்கள் தொகையில்...

விக்டோரியா மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும்...

உலகின் மிக அற்புதமான நகரங்களில் மெல்போர்ன் முதலிடம்

உலகின் சிலிர்ப்பை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெயரிடப்பட்டுள்ளது. டைம் அவுட் சாகரவா இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது...