முன்னதாக, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த அரண்மனையான பிளென்ஹெய்ம் அரண்மனையில் உள்ள 18 காரட் தங்க கழிப்பறை திருடப்பட்டது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு பதிவாகியுள்ள சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 39 வயதான ஜேம்ஸ் ஷீன் செவ்வாய்க்கிழமை (02) Oxford Crown நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இவர் ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட தொடர் திருட்டு வழக்கில் 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மைக்கேல் ஜோன்ஸ் (38), பிரெட் டோ (35) மற்றும் போரா குகுக் (39). மூன்று பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.
திருடப்பட்ட தங்கக் கழிப்பறை $6 மில்லியனுக்கும் மேலானது மற்றும் முழுவதுமாக 18 காரட் தங்கத்தால் ஆனது.