Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

IPL தொடரில் நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதின. அதில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணிக்கு ஆரம்ப வீரர்களாக விராட் கோலி மற்றும் போப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ஓட்டங்களை சேர்த்தனர். அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடினர். இதனால் அணியின் ஸ்கோர் சற்று மெதுவாகவே உயர்ந்தது. போகப்போக அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர். நடப்பு சீசனில் முதல் முறையாக 100 ஓட்டங்களைக் கடந்த இவர்களது பார்ட்னர்ஷிப் 125 ஓட்டங்களில் பிரிந்தது.

டு பிளிஸ்சிஸ் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாது நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமாகவும் இது பதிவானது.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு ஜோஸ் பட்லருடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

பின்னர் இந்த ஜோடியில் அணி தலைவர் சஞ்சு சாம்சன் 69 (42) ஓட்டங்களில் பிடிகொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 4 ஓட்டங்களிலும், துருவ் ஜூரெல் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 4 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும், ஹெட்மயர் 11 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் டாப்லி 2 விக்கெட்டுகளும், யாஸ் தயாள் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றிபெற்றது.

Latest news

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...

விக்டோரியன் காவல்துறை அதிகாரியை மிரட்டியதற்காக Neo-Nazi தலைவருக்கு தண்டனை

Neo-Nazi தலைவர் Thomas Sewell 200 மணிநேர சமூக சேவையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விக்டோரியா காவல்துறை அதிகாரி மற்றும் அவரது கூட்டாளியை மிரட்டியதாக Neo-Nazi தலைவர் ஒருவர்...

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...