Newsகாசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

காசாவில் இருந்து வெளியேறிய இஸ்ரேல் படைகள்

-

தெற்கு காசாவில் இருந்து ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதுவரையில் நிலவி வரும் மோதல்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படையினர் வெளியேறியமைக்கான காரணமோ, அதில் ஈடுபட்ட மொத்த துருப்புக்களின் எண்ணிக்கையோ வெளியிடப்படவில்லை.

இஸ்ரேலிய குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட தெற்கு காசா நகரின் கான் யூனிஸ் பகுதியில் வசிப்பவர்கள், இஸ்ரேலியப் படைகள் நகர மையத்திலிருந்து வெளியேறி கிழக்கு மாவட்டங்களுக்கு பின்வாங்குவதைக் கண்டதாகக் கூறினர்.

ஹமாஸ் போராளிகளை ஒழிக்க விரும்புவதாக இஸ்ரேலிய தலைவர்கள் கூறியுள்ளனர், மேலும் அவர்கள் தெற்கு காஸா நகரமான ரஃபா மீதான படையெடுப்பை தாமதப்படுத்துவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

எகிப்து எல்லைக்கு அருகில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள ரஃபா நகரை தாக்கும் திட்டம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த எகிப்து தயாராகி வரும் நிலையில் இஸ்ரேலியப் படைகள் வாபஸ் பெறப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலில் பாரிய மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் இதுவும் நடக்கிறது.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...