Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி கோக் மற்றும் அணித் தலைவர் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ஓட்டங்களுடனும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ஓட்டங்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ஓட்டங்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல ஆரம்பத்தைக் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ஓட்டங்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அணித் தலைவர் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...