Sports2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி - IPL...

2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சால்ட் 10 ஓட்டங்களுடனும் அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து நரேனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க. இதையடுத்து ரசல் களம் இறங்கினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரேன் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதில் ரசல் 13 ஓட்டங்களுடனும், நரேன் 109 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் நிலைக்கவில்லை. அவர் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரியான் பராக், பட்லருடன் ஜோடி சேர்ந்து அதிரடியுடன் விளையாடினார். அவர் 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் பட்லர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், மறுபுறம் துருவ் ஜுரேல் (2), அஷ்வின் (8), ஹெட்மயர் (0) அடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரரான ரோவ்மேன் பவல், அதிரடி காட்டினார். குறிப்பாக, சுனில் நரேன் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசிய அவர், அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

எனினும், பட்லர் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 18வது ஓவரில் 18 ஓட்டங்களை திரட்டிய அவர், 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 19 ஓட்டங்களை எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ஓட்டங்களே தேவைப்பட்டது.

முதல் பந்தை பட்லர் சிக்சருக்கு பறக்கவிட்டார். அடுத்த 3 பந்துகளில் ஓட்டம் ஏதும் வரவில்லை 5வது பந்தில் 2 ஓட்டங்களும், கடைசி பந்தில் ஒரு ஓட்டமும் எடுத்து ஆட்டத்தை பட்லர் தித்திப்பாக முடித்துவைத்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 107 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் ரானா, வருண், நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...