Sportsபஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை - IPL 2024

பஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிவந்த ரோகித் சர்மா, 25 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் யாதவ், அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்களான ஹர்திக் 10 ஓட்டங்களிலும், டிம் டேவிட் 14 ஓட்டங்களிலும், சைபர்ட் ஒரு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், திலக் வர்மா அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளும், சாம் கரண் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் சார்பில் சாம் கரண் மற்றும் பரப்சிம்ரன் சிங் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியில் பரப்சிம்ரன் சிங் (0) ஓட்டம் ஏதும் எடுக்காதநிலையில் வெளியேறினார். அவரைத்தொடர்து ரூசோவ் 1 ஓட்டங்களிலும், சாம் கரண் 6 ஓட்டங்களிலும், லிவிங்ஸ்டோன் 1 ஓட்டத்துடனும் ஹர்பிரித் சிங் பாட்டியா 13 ஓட்டங்களிலும், ஜிதேஷ் சர்மா 9 ஓட்டங்களிலும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங் சிங் 41 ஓட்டங்களில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக அசுடோஷ் சர்மாவுடன், ஹர்பிரித் பிரார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த அசுடோஷ் சர்மா 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 28 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஹர்பிரித் பிரார் 21 ஓட்டங்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி ஓவரில் 8 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் ஹர்ஷல் பட்டேல் 1 ஓட்டத்துடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் கோட்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் மேத்வால், கோபால் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றிபெற்றது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...