இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது பக்தர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
திங்கட்கிழமை இரவு சிட்னி தேவாலயத்தில் தாக்குதலுக்கு உள்ளான பிஷப் மேரி இம்மானுவேல், தாக்குதல் குறித்தும் அவர் குணமடைந்தது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கியவரை மன்னிப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக இருப்பதாகவும் பிஷப் கூறுகிறார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் இத்தாக்குதலை ஒரு பயங்கரவாத சம்பவம் என்று விசாரித்து வருகின்றனர், யார் செய்திருந்தாலும் மன்னிப்பதாக பிஷப் கூறினார்.
இதற்கிடையில், தேவாலயத்திற்கு வெளியே நடந்த சம்பவத்தில் 51 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்று மாநில போலீஸ் கமிஷனர் கரேன் வெப் தெரிவித்தார்.
தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேகநபர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் இருப்பதாகவும் அவரிடமிருந்து வாக்குமூலங்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை எனவும் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சியாளர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.