இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய பதில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் வாக்களித்த நிலையில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.
அவருடன் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழக பெரும ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளனர்.
இதில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார் . ஏனைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.