Sports9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய 38-வது லீக் போட்டியில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ஓட்டங்களும் வதேரா 49 ஓட்டங்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ஓட்டங்களிலும் சாம்சன் 38 ஓட்டங்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

வாடிக்கையாளர்களுக்கு லட்சக்கணக்கான குறுஞ்செய்திகளை அனுப்பியதால் பீட்சா நிறுவனத்திற்கு அபராதம்

உலகம் முழுவதும் பிரபலமான பீட்சா ஹட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 2.5 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் பீட்சாக்கள் குறித்த குறுஞ்செய்திகளை...

நோயாளியின் மரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள பெரிக்கி மருத்துவமனை

விக்டோரியாவின் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநரான மோனாஷ் ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின் ஒரு பகுதியான பெரிக்கில் உள்ள மோனாஷ் ஹெல்த் கேசி மருத்துவமனைக்கு $160,000 அபராதம்...

புற்றுநோய் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள புதிய தகவல்

புற்றுநோய் உருவாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இரத்தத்தில் மாற்றம் ஏற்படுவதாக சமீபத்திய புற்றுநோய் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. புற்றுநோயுடன் தொடர்புடைய ரத்தத்தில் உருவாகும் புரதத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே...

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...