Sports4 ஓட்டங்களால் வென்றது டெல்லி - IPL 2024

4 ஓட்டங்களால் வென்றது டெல்லி – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மோதிய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில், அதிகபடியாக ரிஷப் பண்ட் 88 ஓட்டங்களையும், அக்ஷர் படேல் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சந்தீப் வாரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அத்தோடு இந்த போட்டியில் குஜராத் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான மொகித் சர்மா 4 ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாமல் 70 ஓட்டங்களை வாரி வழங்கினார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் வாரி வழங்கிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இனி அமெரிக்காவிற்கு எளிதாக பயணிக்கலாம்

தெற்கு ஆஸ்திரேலியர்கள் இப்போது அடிலெய்டில் இருந்து அமெரிக்காவிற்கு நேரடி விமானங்களை முன்பதிவு செய்யலாம். அமெரிக்க விமான நிறுவனமான United Airlines, வாரத்திற்கு மூன்று விமானங்களை திங்கள், புதன்...

ஆசியர்களின் உணவு முறைகளால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலிய விவசாயிகள்

பல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்கள் மேற்கத்திய உணவு வகைகளை நோக்கி அதிக நாட்டம் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. பாரம்பரிய உணவுக்குப் பதிலாக துரித உணவுகளை நோக்கிய...

ஜூலை 1 முதல் ஆஸ்திரேலிய Skilled விசாவில் ஏற்படும் மாற்றம்

ஜூலை 1 ஆம் திகதி முதல் திறன் விசா வைத்திருப்பவர்களுக்கான குறைந்தபட்ச வருமான தள்ளுபடியை 4.6 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வருடாந்திர வாராந்திர ஊதிய...

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், குறிப்பாக ஆஸ்திரேலியா மீது புதிய வரிகளை விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, இந்த முடிவு ஆஸ்திரேலிய...