Breaking Newsசிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் - இருவர்...

சிட்னி உட்பட இரண்டு பகுதிகளில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் – இருவர் பலி

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி உள்ளிட்ட இரண்டு பகுதிகளில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு இந்த குற்றச் செயல்கள் நடந்ததாக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

சிட்னியின் குவாக்கர்ஸ் ஹில் பகுதியில் நேற்று இரவு 8.25 மணியளவில் 28 வயதுடைய நபர் ஒருவர் மார்பில் வெட்டுக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் அவருக்கு அடிப்படை சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், கத்தியால் தாக்கப்பட்ட இளைஞனின் அடையாளத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ், நரோமைனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் 16 வயது சிறுவன் கழுத்து பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 7 சிறார்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14, 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் பொது இடத்தில் கத்தியை எடுத்துச் சென்றது, சதி செய்தல் அல்லது பயங்கரவாதச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு சிறுவர்கள் மீது இன்னும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மூன்று சிறார்கள் மற்றும் இரண்டு பேர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர், இன்னும் கைது செய்யப்படவில்லை.

Latest news

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

மே 3ம் திகதி மீண்டும் பிரதமரானால், டிரம்பின் வரிகளுக்குப் பதிலளிப்பேன் – அல்பானீஸ்

மே 3 ஆம் திகதி தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிப்பேன் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். அமெரிக்க அதிபர்...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்துள்ளதாக CSIRO ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிடுகின்றது. நேற்று வெளியிடப்பட்ட...

மே 3ம் திகதி மீண்டும் பிரதமரானால், டிரம்பின் வரிகளுக்குப் பதிலளிப்பேன் – அல்பானீஸ்

மே 3 ஆம் திகதி தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிபர் டிரம்பின் வரிகளுக்கு பதிலளிப்பேன் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். அமெரிக்க அதிபர்...

WA பள்ளிகள் மீதான தடையை ரத்து செய்தார் அமைச்சர்

மேற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுமாறு கல்வி அமைச்சர் Sabine Winton துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 27 அன்று, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து...