லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக பணிபுரியச் சென்ற 106 இலங்கையர்கள் ஐரோப்பாவில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த இலங்கையர்கள் எதிர்பார்த்த வேலைகள், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குழுவில் இருந்து லிதுவேனியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு திரும்பி வந்து உண்மைகளை முன்வைத்ததை அடுத்து இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
அந்த இருவர் உட்பட 108 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து 12 இலட்சம் ரூபாவை செலுத்தி கொழும்பில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகளாக வெளியேறியுள்ளனர்.
லிதுவேனியாவுக்குச் சென்ற பின்னர் அந்நாட்டு நிறுவனமொன்று இலங்கையர் இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதி பதவிகளை வழங்கி எஞ்சியவர்களை பன்றிக்கூடுகளில் வேலைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட சாரதிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து, இரண்டு வருடங்களாக வழங்கப்பட்ட வதிவிட விசாவை லிதுவேனியா அரசாங்கம் இரத்துச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.