Sports9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு - IPL 2024

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28 இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்ப வீரர்களான ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஜோடி சுமாரான ஆரம்பத்தை கொடுத்தது. இருவரும் முறையே 5 மற்றும் 16 ஓட்டிங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷாருக் கான் நிதானமாக ஆடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், ஷாருக் கான் 30 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை குவித்தது. சாய் சுதர்சன் 49 பந்துகளில் 84 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 19 பந்துகளில் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு சார்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 201 ஓட்டங்கள் என்ற வெற்றியலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 16 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 206 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் பலி

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த Potts Point-ஐ சேர்ந்த எண்பது...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...