Sportsஐதராபாத்தை வீழ்த்தி 78 ஓட்டங்களால் வென்ற சென்னை - IPL 2024

ஐதராபாத்தை வீழ்த்தி 78 ஓட்டங்களால் வென்ற சென்னை – IPL 2024

-

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாட தொடங்கிய சென்னை அணிக்கு ஆரம்ப வீரரான ரஹானே 9 ஓட்டங்களுடன் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடினார்.

டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்தனர். மிட்செல் 32 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் துபே வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கெய்க்வாட் 54 பந்துகளில் 98 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியர்கள் தங்கள் நிதியை நிர்வகிக்க ஒரு புதிய திட்டம்

நிதி மேலாண்மை குறித்த இலவச கல்வி அறிவை வழங்க ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய திட்டம். Ecstra நடத்திய இத்திட்டத்தின் மூலம் சுமார் 400,000 மாணவர்கள் அத்தியாவசிய நிதி...

தொடர்ந்து 5வது முறையாக செஸ் சாம்பியன் ஆனார் Magnus Carlsen

Magnus Carlsen மீண்டும் 2024 சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தின் சாம்பியன்ஷிப்பை வெல்வதில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, Magnus Carlsen தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன்ஸ் செஸ் டூரில்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் இருந்து அவசரகால சேவைகளைக் கண்டறிய புதிய APP

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு அவசரகால சூழ்நிலைகளை அறிவிக்க புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளது. "Emergency WA" என்று அழைக்கப்படும் இந்த புதிய பயன்பாடு, மாநிலத்தின் 10...

புற்றுநோய்க்கு எதிராக வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி

புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு முதல்...

புற்றுநோய்க்கு எதிராக வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி

புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு முதல்...

ஆட்குறைப்பு செய்த Google நிறுவனம் – தொழிலை இழந்த ஊழியர்கள்

Google நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நாட்களில் Google இல்லாமல் உலக...