இலங்கை உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்காக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிச் செயலாளர் மிட்செல் சான் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் முதல் கட்டமாக இந்த விமானம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 65,610 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை விட 23 மடங்கு பெரிய இந்தியப் பெருங்கடலில் இலங்கை ஒரு பிரத்யேக பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளது.