Melbourneமெல்போர்னில் உள்ள பிரபல உணவகம் அருகே கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள பிரபல உணவகம் அருகே கத்திக்குத்து

-

மெல்போர்னில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகம் அருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கத்திக்குத்து காரணமாக குறித்த நபருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சுமார் 6 மணியளவில் St Albans இல் உள்ள துரித உணவு நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் காயமடைந்த நபர் ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசர சேவைகள் சென்றன.

இதுவரை அடையாளம் காணப்படாத இந்த நபர், உடலின் கீழ் பகுதியில் பலத்த காயங்களுடன் காணப்பட்டு மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வேறு ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...