மெல்போர்னில் உள்ள வாட்டர்கார்டன் ஷாப்பிங் சென்டரில் கத்தியை காட்டி வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர் .
அதே ஷாப்பிங் சென்டரில் உள்ள கடையில் கத்தியை வாங்கி வாடிக்கையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், சந்தேக நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் ஷாப்பிங் சென்டருக்குள் இருந்த 21 வயதுடைய ஆண் மற்றும் 20 வயதுடைய பெண் ஒருவரை அச்சுறுத்துவதற்காக கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாக விக்டோரியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கத்திக்குத்து வன்முறை அலை வீசுவதுடன், மக்களும் இது தொடர்பில் கவலையடைந்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் விக்டோரியா ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்த போதிலும் அவசர சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.