சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும்.
அவர்கள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இந்த இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மிக விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.