புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட விரும்புதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
“ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா இப்போது புதிய அரசாங்கத்தை நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிச் செயல்படவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றவும் ஊக்குவிக்கிறது. இலங்கை மக்களுக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.