Sports60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி...

60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது RCB அணி – IPL 2024

-

தரம்சாலா மைதானத்தில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது.

விராட் கோலி (92), பட்டிடார் (55), கிரீன் (46) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூரு அணி 241 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரோசோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.

பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அதிரடி காட்டினார்.

இதற்கிடையில் அரைசதம் அடித்த ரோசோவ் 27 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் விளாசினார்.

பின்னர் ஷஷாங்க் சிங் 37 (19) ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார். கார்ன் ஷர்மா, சிராஜ் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அந்த அணி 17 ஓவரில் 181 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதன்மூலம் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. மேலும், 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது. 92 ஓட்டங்கள் விளாசிய கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என கணிப்பு

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆபத்து மற்றும் மறுமொழி நிறுவனத்தின்...

ரஷ்யாவுக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன – டிரம்பின் சமீபத்திய மிரட்டல்

போர் நிறுத்தத்திற்காக ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் குறைத்துள்ளார். உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு புதின் உடன்படவில்லை என்றால், கடுமையான...

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...