Adelaideஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி...

ஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 


டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.தொடக்க வீரர்கள் டெவன் கான்வேயும் – ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர்.


41 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில்  கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.  49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவான் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துபே 32 ரன்களும், கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.


20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் குவித்தது. 
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  மிட்சல் மார்ஷ் 25 ரன்னும், ரிஷப் பந்த் 21 ரன்னும், சர்துல் தாக்கூர் 24 ரன்னும் அடித்தனர். 


மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


இதையடுத்து சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 3 விக்கெட்களும், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

Latest news

விக்டோரியாவில் சூதாட்டக்காரர்களுக்கு வெளியான அதிர்ச்சியான தகவல்

விக்டோரியா மாகாணத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே நேரத்தில் Porker இயந்திரங்களில் போடக்கூடிய அதிகபட்ச பணம் 1000 டாலர்களில் இருந்து 100 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விக்டோரியா மாநில...

அவுஸ்திரேலியர்களுக்கு நெருக்கடியாக மாறியுள்ள நத்தார் பண்டிகை!

வாழ்க்கைச் செலவு அழுத்தத்தை எதிர்நோக்கும் நிலையில், இந்த வருடம் நத்தார் பண்டிகையை கொண்டாடுவது அவுஸ்திரேலியர்களுக்கு நெருக்கடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலியர்களுக்கு கிறிஸ்மஸ் காலத்தில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்...

100 மில்லியன் டாலர்களை வெல்ல அதிக ஆர்வமாக உள்ள மக்கள்

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பெரிய பவர்பால் டிரா நாளை டிரா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது $100 மில்லியன் வெற்றி, கடந்த வாரம் $50 மில்லியன் பவர்பால் டிரா வெற்றியாளர்...

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் செர்ரி பழங்களுக்கு தட்டுப்பாடு

கிறிஸ்துமஸ் சீசனில் ஆஸ்திரேலியர்களின் சாப்பாட்டு மேசையில் பிரபலமான உணவாக இருக்கும் செர்ரி பழங்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா...

100 மில்லியன் டாலர்களை வெல்ல அதிக ஆர்வமாக உள்ள மக்கள்

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பெரிய பவர்பால் டிரா நாளை டிரா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அது $100 மில்லியன் வெற்றி, கடந்த வாரம் $50 மில்லியன் பவர்பால் டிரா வெற்றியாளர்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்கள் ரத்து

மெல்பேர்ணின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏராளமான உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெல்பேர்ண் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மூடுபனி "செயல்பாடுகளில் தாக்கத்தை...