அமெரிக்காவில் உள்ள தந்தை ஒருவர் தனது இளம் மகளை காரில் தனியாக விட்டுவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஃபுளோரிடாவின் தந்தை ஒருவர் தனது மூன்று வயது மகளை அன்னையர் தினத்திற்காக தனது மனைவிக்கு பரிசு வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தபோது காரில் தனியாக விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரெய்லோ பெர்னாண்டஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், கடையின் உள்ளே இருந்தபோது, மற்றொரு கடைக்காரர் காரில் சிறுமி தனியாக அழுவதைக் கண்டார்.
குழந்தையின் பாதுகாப்பு குறித்து கவலையடைந்த அந்த நபர், காரின் பின்பக்க கதவை திறந்து சிறுமியை வெளியே எடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அறிக்கையின்படி, வீட்டில் இருந்து கடைக்குச் சென்றதாகவும், தனது மகள் காரில் இருந்ததை முற்றிலும் மறந்துவிட்டதாகவும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அவரது அறிக்கையின்படி, அவர் அன்னையர் தினத்திற்காக ஷாப்பிங் செய்வதில் மிகவும் பிஸியாக இருந்ததால், குழந்தை காரில் இருப்பதை மறந்துவிட்டார்.
சிறுமி சூடான காரில் சுமார் 31 நிமிடங்கள் இருந்ததாகவும், மேல் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
புளோரிடாவில் தற்போது பதிவான வெப்பநிலையானது, காரின் உட்புற வெப்பநிலை அபாயகரமாக விரைவாக உயரக்கூடும் என்று அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
பூட்டிய வாகனத்தின் வெப்பநிலை 10 நிமிடங்களுக்குள் ஆபத்தான நிலையை எட்டும் என்றும் அவர்கள் கூறினர்.