Brisbaneபிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

பிரிஸ்பேன் பள்ளி அருகே பயங்கர கத்திக்குத்து

-

பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள பள்ளி ஒன்றிற்கு அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள கிரிகோரி மற்றும் ரொட்சே வீதி சந்திப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுமார் ஒரு வாரத்திற்குள் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது வாள்வெட்டு சம்பவம் இதுவென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் அகாசியா ரிட்ஜில் உள்ள மோர்டிமர் சாலையில் உள்ள பூங்கா ஒன்றில் 22 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

உயிரிழந்தவரின் 30 வயதுடைய நண்பரும் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...