Sportsபெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் - IPL 2024

பெங்களூருவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ஓட்டங்கள், கோலி 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேமரூன் க்ரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ரீன் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் புகுந்த மேக்ஸ்வெல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக படிதார் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய படிதார் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து இம்பேக்ட் வீரராக ஸ்வப்னில் சிங் களம் புகுந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

Latest news

விக்டோரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சுகாதார எச்சரிக்கை

கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளை அழற்சியின் முதல் வழக்கு விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மூளைக்காய்ச்சல் டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. மேலும் வடக்கு...

2025 ஆம் ஆண்டில் AI எவ்வாறு ஆஸ்திரேலியர்களை பாதிக்கும்?

AI தொழில்நுட்பம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியர்களுக்கு அதிக நன்மைகளைத் தரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். AI ஆனது 2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களுக்கு பயனளிக்கும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு...

புத்தாண்டு விடியலுடன், விக்டோரியாவில் பதிவாகிய பல சட்டவிரோத நடவடிக்கைகள்

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் சட்ட விரோதமான வானவேடிக்கைகளைப் பயன்படுத்துவதால் மெல்பேர்ணில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன. மெல்பேர்ணின் வடக்கு பகுதியில் சட்டவிரோத பட்டாசுகளை பயன்படுத்தியதால் மூன்று தீ விபத்துகள்...

அமெரிக்காவில் கோர விபத்து – 10 பேர் பலி

அமெரிக்காவில் ட்ரக் வாகனமொன்று அதிக வேகத்தில் கூட்டத்தின் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் டிரக் வாகனமொன்று பொதுமக்கள் மீது...

சென்டர்லிங்க் கட்டணங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு

நலத்திட்ட உதவிகள் பெற வேண்டிய தொகையை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திருத்தம் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தில் அந்த...

ஆஸ்திரேலியா மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான சமீபத்திய மாற்றங்கள்!

ஜனவரி முதல் தேதியிலிருந்து, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறையில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது "Letter of...