Melbourneமெல்போர்னில் திருடப்பட்ட காரை நிறுத்த சென்ற போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்

மெல்போர்னில் திருடப்பட்ட காரை நிறுத்த சென்ற போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்

-

மெல்போர்னில் திருடப்பட்ட காரை நிறுத்த முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது கார் மோதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில், வெர்மான்ட் தெற்கில் உள்ள ஸ்பிரிங்வேல் சாலை சந்திப்பில் உள்ள ஒரு மோட்டலுக்கு இரண்டு அதிகாரிகள் திருடப்பட்ட வாகனம் பற்றிய புகாரைத் தொடர்ந்து சென்றனர்.

அப்பகுதியைச் சுற்றி காரை நிறுத்துவதற்கு டயர் டிஃப்லேஷன் கருவியை பயன்படுத்த முற்பட்ட வேளையில், அதிகாரிகளுக்கு ஆபத்தை விளைவித்து ஓட்டுநர் ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 27 வயதுடைய அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தோள்பட்டை முறிவு உட்பட பலத்த காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெர்மான்ட்டில் உள்ள டக்கர் சாலையில் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரின் கமெரா காட்சிகளை வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

வீட்டு வாடகை விலைகள் அதிகரிப்பால் குறைந்துவரும் மலிவு விலை வீடுகள்

கடந்த 12 மாதங்களில், சில பகுதிகளில் வீட்டு வாடகை விலைகள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் பொதுவாக மலிவு விலை வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட...

நேற்றிரவு விக்டோரியா வானில் தென்பட்ட வெளிச்சம்

விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வானில் தென்பட்ட பெரிய வெளிச்சம் குறித்த ஆர்வம் அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சிறுகோளின் பாகம் என்று நம்பப்படும்...

மனிதர்களுக்கான பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக, விலங்குகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க ஃபின்லாந்து திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தொடர்புடைய தடுப்பூசியை வழங்கும் உலகின் முதல்...

மெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4...