Melbourneமெல்போர்னில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் ஒருவர் காயம்

மெல்போர்னில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் ஒருவர் காயம்

-

மெல்போர்னின் வடக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முந்தினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் மேற்பகுதியில் சுடப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பான சரியான சூழ்நிலைகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான சந்தேக நபரையோ அல்லது காரணத்தையோ இதுவரை பொலிசார் வெளியிடவில்லை, மேலும் விசாரணைகள் தொடர்கின்றன.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

பீட்டர் டட்டன் வீசிய பந்தால் காயமடைந்த கேமராமேன்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வீசிய கால்பந்து தலையில் அடிபட்டு தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் காயமடைந்துள்ளார். டார்வினில் ஒரு புகைப்படப் படப்பிடிப்பிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த டட்டன்,...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியாவில் பரவும் காய்ச்சல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது விக்டோரியாவில் காய்ச்சல் பாதிப்புகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் விளைவாக, சுகாதார அதிகாரிகள் விக்டோரிய...