Newsபல கோடி மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட “All eyes on...

பல கோடி மக்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட “All eyes on Rafah” புகைப்படம்

-

AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” என்ற காசா ஆதரவு வாசகம் கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

2023 ஒக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,171 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளதுடன் பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, மத்திய காசாவில் தனது தாக்குதலை முழு வீச்சில் நடத்திய இஸ்ரேல் இப்போது தெற்கு காசாவைக் குறிவைத்துள்ளது. தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” புகைப்படமும் வேகமாகப் பரவியது. இஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன. பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பாலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தை பாலஸ்தீன பின்புலம் கொண்ட அமெரிக்க நடிகர் பெட்ரோ பாஸ்கல், மாடல்கள் பெல்லா, கிகி ஹாடிட், பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர் ஓஸ்மானே டெம்பேல் ஆகியோர் தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். ட்விட்டரில் இந்த் ஹேஷ்டேக் 2.75 கோடி முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் தரப்போ ஹமாஸ் அமைப்பின் மிக முக்கியப் புள்ளிகளான இருவரைக் கொலை செய்யவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும். அந்த இலக்கை எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

Boxing Day தினத்தில் ஆஸ்திரேலிய செலவினம் பற்றிய கணிப்பு

இந்த ஆண்டு குத்துச்சண்டை தினத்தில் ஆஸ்திரேலியர்களின் செலவுகள் சாதனை அளவில் அதிகரிக்கும் என்று புதிய தரவு அறிக்கைகள் காட்டுகின்றன. அந்த நாளில் மட்டும் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட $1.3...

விக்டோரியாவில் நாளை BBQ இற்கு தடை

Boxing day தினத்தன்று விக்டோரியாவில் வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவின் CFA Boxing day தினத்திற்கு மாநிலம்...

கிறிஸ்மஸ் பரிசுகளை விற்று பணம் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற பரிசுகளை விற்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 52 சதவீத ஆஸ்திரேலியர்கள்...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...

12 மாதங்களுக்கு $1700 அதிகமாக செலுத்தும் மெல்போர்ன் குடியிருப்பாளர்கள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆண்டு வாடகை $3600 ஆக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. SQM ஆராய்ச்சி அறிக்கைகளின்படி வாராந்திர வாடகை...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...