Newsஅனைத்து கட்சி அரசாங்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பு

அனைத்து கட்சி அரசாங்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பு

-

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கட்சி அரசாங்களம் நியமிக்கப்படும் என்று சிங்கள நாளேட்டின் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவை ஒன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரிசாட் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் குழுக்கள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளன.

அதற்காக எதிர்காலத்தில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைப்பார் என அறியப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, முன்னாள் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாக நேற்று வெள்ளிக்கிழமை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், நிரந்தரமாக்கும் போது அமைச்சர்களின் வீச்சும் மாறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் – 10 ஆண்டுகள் பூர்த்தி

தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு நியூ சவுத்...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...