மேற்கு அவுஸ்திரேலியாவின் கராபினில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் உயிரிழந்த கார் விபத்தில் குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி காலை 11 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்த கார் மரத்தில் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறு காயங்களுக்கு உள்ளான 31 வயதுடைய பெண்ணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இரட்டை பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த இரண்டு சிறுமிகளுக்கும் 7 வயது ஆகும்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வடக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.