AdelaideShopping Mall-ஐ போர்க்களமாக மாற்றிய அடிலெய்டு இளைஞர்கள்

Shopping Mall-ஐ போர்க்களமாக மாற்றிய அடிலெய்டு இளைஞர்கள்

-

தெற்கு அடிலெய்டில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மரியன் ஷாப்பிங் சென்டரில் நடந்த மோதலில் தொடர்புடைய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், வணிக வளாகத்தை மூடி, மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இன்று காலை 15 மற்றும் 16 வயதுடைய 3 சிறுவர்களை தாக்குதல், அவமதித்தல் மற்றும் கொள்ளையடித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் குழுவிற்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில், தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களைக் கொண்ட குழு வணிக வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சண்டையிட்டதாக வெளிப்படுத்தினார்.

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பொலிஸார் மேலும் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தற்செயலான தாக்குதல் அல்ல என்றும், மற்றுமொரு இளைஞர் குழுவை தாக்குவதற்காக மூன்று சிறுவர்கள் வர்த்தக நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெஸ்ட்பீல்டில் கடைகள் இன்று வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...