Melbourneமெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது ​​ஒரு பள்ளியும்...

மெல்போர்ன் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது ​​ஒரு பள்ளியும் தீப்பிடித்தது

-

Melbourne, Point Cook பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தீயினால் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும், பல வகுப்பறைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், இது சந்தேகத்திற்கிடமான சம்பவம் என விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மெல்பேர்னின் டெரிமட் பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக விக்டோரியா தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வீதிகள் மூடப்பட்டுள்ளதாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் அருகில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளுக்கு செல்ல வந்த வாகனங்கள் பலவும் வீதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி அணைத்தனர்.

டெல்ஸ்ட்ரா நிறுவனத்தின் தொடர்பாடல் கோபுரம் ஒன்றும் தீயினால் சேதமடைந்துள்ளமையினால் டெரிமட் பகுதியில் சில தொலைபேசி சேவைகள் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இருந்து வெளியேறும் புகையால் நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இல்லை எனவும், அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு காரணம், தீயை அணைக்க அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டதால், ரசாயனங்கள் கலந்த நீர் பொதுவான நீர்வழிப்பாதைகளில் புகுந்ததுதான்.

எவ்வாறாயினும், அந்த நீர் குடிநீராக இல்லாததால், தற்போது பயன்படுத்தப்படும் குடிநீருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் பாதிப்பு சரியாக கண்டறியப்படும் வரை அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை அணுக வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...